உக்ரைனின் மிக் ரக விமானத்தை தாக்கியழித்த ரஷ்யா! இரும்பு ஆலை மீதும் தாக்குதல்!
கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் போது உக்ரைனின் MiG-29 போர் விமானம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், தமது படையினர் இரண்டு Tochka-U ஏவுகணைகளையும், ஒரு Smerch ஏவுகணையையும் அழித்ததாகக் கூறினார்.
அத்துடன் பத்து உக்ரைனிய ட்ரோன்களும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் உக்ரைனில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளைச் சாவடிகள் உட்பட 38 இராணுவ இலக்குகளையும் ரஷ்யப் படைகள் தாக்கியதாக அவர் கூறினார்.
இதேவேளை பரந்த தொழிற்துறை வளாகத்தில் இருந்து உக்ரைனிய குடிமக்களை வெற்றிகரமாக வெளியேற்றியதைத் தொடர்ந்து, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் வெளியேற்றும் நடவடிக்கைக்காக கடந்த இரண்டு நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
இந்தநிலையில் இன்றைய பொழுதில் இறுதி குடிமகன் ஆலையை விட்டு வெளியேறியவுடன், ரஷ்யா தமது தாக்குதலை ஆரம்பித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆலைக்குள் மேலும் பொதுமக்கள் காயமடைந்த படையினருடன் தங்கிருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.