மட்டக்களப்பில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று (12.08.2023) மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து தரிப்பிட வளாகத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த நபர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த பகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும் பேருந்து தரிப்பிட கட்டிடங்களில் தங்கி வாழ்ந்து வருதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
