கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் திடீர் கைது
கொழும்பு - கல்கிசை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதிகள் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது நேற்று(30) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை சம்பவம்
இவர்கள் கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி கல்கிசையில் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் துபாய்க்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கல்கிசை பொலிஸார் விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்படி, விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர்களுக்கு
எதிராக தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்திருந்தது.
இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-653 விமானத்தில் துபாய்க்கு புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த வேளையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
you my like this video