நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் - பொலிஸார் நடவடிக்கை
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது முதல் கொழும்பில் உள்ள நட்சத்திர வகுப்பு ஹோட்டல் ஒன்றின் மூன்று அறைகளில் ஆர்ப்பாட்டாரர்கள் குழுவொன்று பலவந்தமாக தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நட்சத்திர ஹோட்டலில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆனால் சம்பந்தப்பட்ட நட்சத்திர விடுதி உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அங்கு தங்கியிருந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருக்கும் அளவிற்கான அவசியம் தங்களுக்கு இல்லை. மக்களுடன் வீதிகளிலேயே இருந்ததாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அண்மையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.