போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்த போது சிக்கிய தம்பதி
ஏறக்குறைய ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் அத்திடிய பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் கல்கிசை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விநியோகம்
சந்தேகநபர்கள் 35 மற்றும் 37 வயதுடைய தம்பதி எனவும், அவர்கள் வீட்டில் ஹெரோயின் பொதி செய்து விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனும், மனைவியும் வீட்டிற்குள் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்த போது சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணம் மீட்பு

போதைப்பொருள் பொதியிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல சாதனங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணத்திலிருந்து 41,000 ரூபா என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
| வடக்கு, கிழக்கு மக்களின் ஆத்திரம் நியாயமானது! சிங்கள இளைஞர் ஆவேசம் |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam