வடக்கு, கிழக்கு மக்களின் ஆத்திரம் நியாயமானது! சிங்கள இளைஞர் ஆவேசம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அது தொடர்பில் சிங்கள இளைஞர் ஒருவர் காணொளி வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் வடக்கில் உள்ள மக்களை இப்படிதான தாக்கி இருப்பார்கள் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு மக்கள் எம்மீது ஆத்திரம் கொண்டிருப்பது நியாயமானது அல்லவா என வினவியுள்ளார்.
இது தொடர்பாக விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,