திலீப பீரிஸ் தலைமையில் குற்றவியல் வழக்குகளை துரிதப்படுத்த விசேட குழு
உணர்திறன் வாய்ந்த மற்றும் கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தலைமையில் ஒரு குழு ஒன்றை சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்க நியமித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வேண்டுகோளையடுத்து இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
குறைபாடுகள் ஆராயப்படும்
இந்தக் குழுவில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பிரியந்த பண்டார, சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வேகொடபொல மற்றும் அரச சட்டத்தரணி சக்தி ஜகொட ஆரச்சி ஏனைய உறுப்பினர்களாவர். தற்போது விசாரணையில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதில் எந்த சட்டக் குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை இந்தக் குழு உறுதி செய்யும்.

விசாரணையின் போது எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க இந்தக் குழு அவசர ஆலோசனைகளை வழங்கும் என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam