கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது
திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (16.10.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான ஈரானிய நபர் இன்று அதிகாலை 4:25 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இருந்து G9-502 ஏர் அரேபியா விமானம் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஒன்-அரைவல் விசா
நாட்டை வந்தடைந்த அவர், ஒன்-அரைவல் விசாவைப் பெறுவதற்காக, குடிவரவு அதிகாரிகளிடம் இத்தாலிய கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த கடவுச் சீட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, ஈரானிய பிரஜை இலங்கையை ஐரோப்பாவிற்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு
மேலும், திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு மேலதிக தொழில்நுட்ப சோதனைகளுக்காக குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
