கிளிநொச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறையை தடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்(Video)
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டடமானது இன்று(14.06.2023) கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்து கோணாவில் விளையாட்டு மைதானத்தில் நிறைவுபெற்றுள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறை
குறித்த போராட்டமானது பெண்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு எதிர்வு கூறியே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கனவனால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நீண்ட நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
கிளிநொச்சி-கோணாவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான
வன்முறைகளும் துன்புறுத்தல்களும் அதிகளவில் காணப்படுகின்றமை தொடர்பில்
சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பெண் அடிமைத்தனம் இனி வேண்டாம், பெண்களுக்கு அநீதி இனியும் நடக்கக்கூடாது, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், பெண்களை சுதந்திரமாக வாழவிடு போன்ற பாதாககைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
