சிகை அலங்கார நிலையத்தினுள் புகுந்த பேருந்து: திருகோணமலையில் விபத்து
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி தானியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
தானியகம பிரதேசத்தில் கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சிகை அலங்கார நிலையம் ஒன்றின் மீது மோதி நேற்று (23.09.2023) விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் ஒருவர் கடற்படை தளத்திற்குச் சொந்தமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பலத்த காயங்களுக்கு உள்ளான கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் சிகை அலங்கார நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
