இத்தாலிய பிரஜைக்கு கடூழிய ஆயுள் தண்டனை
இலங்கையில் தங்கியிருந்து போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இத்தாலிய பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி.பி.ரத்நாயக்க இன்று கடூழிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் 40 வயதான வத்தீயா ஜீபட் என்ற இத்தாலிய பிரஜைக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த தஹான உள்ளிட்ட அதிகாரிகள் 90 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்த இத்தாலிய பிரஜையை கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கைது செய்தனர்.
அரச சட்டத்தரணி எரந்தி தஸநாயக்க வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan
