யாழில் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது.
சம்பவம்
ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை லான்ட்மஸ்டர் திருத்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலை அருந்தி, மயக்கமுற்றுள்ளது.
மரண விசாரணை
பின்னர் குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri