மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக பல தொழிற்துறைகள் முடங்கியுள்ளதோடு, கறுப்புச் சந்தையில் எரிபொருள் விற்பனை செய்யும் நடைமுறையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல்
இந்த நிலையில், கலன் பிந்துனு பிரதேசத்தில் பெட்ரோல் போத்தல் ஒன்று 2500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சில பகுதிகளில் பெட்ரோல் போத்தல் ஒன்று 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விற்பனை செய்வோரைத் தேடி பொலிசார் சோதனையிட்ட போதிலும், பல்வேறு வழிகளில் இந்த மோசடி தொடர்வதாக சுட்டிக்காடடப்படுகின்றது.