பிரதமரிடம் வழங்கி வைக்கப்பட்ட அரசியலின் மறைக்கப்பட்ட கதைகளை கூறும் நூல்!
“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகளை கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நூல் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்வுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்த காலப்பகுதியில் கேட்டறிந்த இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட ஆபத்தான, சுவாரஸ்சமான மற்றும் பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி இந்நூலை எழுதியுள்ளார்.
1981ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி சபையின் நிறைவேற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி 1990ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன ஊடகப்பிரிவில் பட்டம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

