இயந்திர கோளாறு நடுக்கடலில் பயணிகளுடன் தத்தளித்த படகு!
நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் படகொன்று நடுக்கடலில் பயணித்தபோது இயந்திர கோளாறு காரணமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
நெடுந்தீவில் இருந்து நேற்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட கரிகணன் பயணிகள் படகானது நடுக்கடலில் பயணித்த வேளை திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்க மறுத்துள்ளது.
இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடல் கொந்தளிப்பு
குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளித்துள்ளது.

இதனை அவதானித்த நெடுந்தீவு மக்கள் தமது சிறிய படகுகளை கொண்டு சென்று பயணிகளை ஆபத்திலிருந்து விரைந்து மீட்டதுடன் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது கரைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri