மட்டக்களப்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாம்
உலகத் தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த இரத்ததான முகாமானது, இன்று (27.06.2024) களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
உலகத் தன்மம் அமைப்பின் பல்வேறு சமூகப் பணிகளில் மற்றுமொரு அங்கமாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரத்ததானம்
குறித்த அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் யோ.இதயகீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அந்த அமைப்பின் சுகாதாரம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்குப் பொறுப்பான இணைப்பாளர் வல்லிபுரம் குணசேகரம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபய விக்கிரம, மற்றும் இரத்த நன்கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, ஆர்வத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், இரத்ததானம் வழங்கியதோடு மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவினர் குருதி நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |