நல்லூர் ஆலய சூழலுக்கு வந்த ஒரு தொகுதி மணல்
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயச் சூழலுக்கான ஒரு தொகுதி மணல் இன்று(28) எடுத்து வரப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக ஆலயச் சூழல் மற்றும் நேர்த்திக் கடனில் அங்கப் பிரதிஷ்டை புரியும் பக்தர்களின் வழித் தடங்கலில் வருடந்தோறும் மணல் பரவுவது வழமையாகும்.
முதல் ஒரு தொகுதி மணல்
இதற்காக வருடந்தோறும் 120 உழவு இயந்திரங்கள் அல்லது 30 டிப்பர் வாகனங்களில் மணல் பெற்று வந்தபோதும் கரையோரச் சுற்றுச் சூழல் பாதிப்பு காரணத்தால் மணல் பெறுவதில் இம்முறை நெருக்கடி நிலை காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல தரப்பினரும் தொடர்ந்த முயற்சியின் பயனாக இன்று காலை முதல் ஒரு தொகுதி மணல் எடுத்துவரப்பட்டு ஆலயச் சூழலில் பரப்பப்பட்டுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் யாழ்ப்பாணம் மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
