காலிமுகத்திடல் தாக்குதல் கோழைத்தனமானது: மாக்சிச லெனினிச கட்சி(Video)
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை மிலேச்சத்தனமான செயல் அல்ல கோழைத்தனமான செயலாகும் என மாக்சிச லெனினிச கட்சியின் தலைவர் சி.க.செந்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு கண்டனம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "காலிமுகத்திடலிலுள்ள போராட்டக்காரர்களுக்கு எதிராக நேற்று(22) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது மிகவும் மிலேச்சத்தனமானது.
கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் பதவியினூடாக அவரது குடும்பத்தினர் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டுள்ளனர் என்பதை இந்த போராட்டதினூடாக அறிய முடிகின்றது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
போரட்டக்காரர்கள் இந்த போராட்டதின் ஊடாக சில நியாயமான கோரிக்கைகளையே ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றனர்.
முதல் நடவடிக்கையாக புதிய அரசியல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக தமது ஆலோசனைகள் செவிமெடுக்கப்பட வேண்டும்.
தமக்குள் காணப்படும் இனப்பிரச்சினையையும் தீர்த்து வைக்க வேண்டுமென்றே கோரிக்கைகளை போரட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி ரணில் தொடர்பில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சர்ச்சை தகவல் |