வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (05.09.2023) இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஈச்சிலப்பற்று -இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் வசித்து வரும் சந்திரராஜ் கஜேந்திரராஜ் (21வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்து ஏற்பட காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் ஈச்சிலப்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் ஈச்சிலப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
