கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துனைச்சேனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து 4 வயது சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிறைந்துனைச்சேனையைச் சேர்ந்த முகமட் நபீர் முகமட் ஹாபீர் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் நேற்று இரவு 11 மணிக்கு பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் நீண்ட நேரம் தேடிப்பார்த்த நிலையில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri