24 வயதுடைய யுவதி காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை
24 வயதுடைய யுவதி ஒருவர், காதலன் என கூறிக்கொண்ட ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அங்குலான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் வாதுவ, குடா வஸ்கடுவ, லிப்பன்ஸ் வட்டத்தைச் சேர்ந்த ஹேஷலா கவிந்தி சில்வா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், தலைமறைவான சந்தேகநபர், தனது மனைவியை பிரிந்து வசித்து வருவதாகவும், யுவதியுடன் சுமார் எட்டு மாதங்களாக உறவில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேகநபர், இதற்காக யுவதியை குறிவைத்து வந்துள்ளார். இதன் காரணமாக, யுவதின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்ல மறுத்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தலைமறைவு
சந்தேகநபரின் சகோதரர் அங்குலான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதுடன், அதே நேரத்தில் தாய் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மேலும் சந்தேகநபர் மற்றும் யுவதிக்கு அவரது தாயார் அல்லது சகோதரரின் வீட்டிலிருந்து உணவு வழங்குவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam