காலியில் படகு கவிழ்ந்ததில் 16 வயது மாணவனைக் காணவில்லை
காலியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 16 வயதான பாடசாலை மாணவனைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காலி தெவட்ட கடற்பரப்பில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தப் படகில் மூன்று பேர் பயணித்துள்ளதாகவும் படகு கவிழ்ந்த போது இருவர் கரைக்கு நீந்தி வந்துவிட்டதாகவும், பாடசாலை மாணவனைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீன்பிடியில் ஈடுபடுவதற்காக இவர்கள் படகில் கடலுக்கு சென்றுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இந்தப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கரைக்கு நீந்தி வந்த இருவரும் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுகொட முல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவரே சம்பவத்தில் காணாமல் போயுள்ளார்.