யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயரிழந்த 15 வயது சிறுவன்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) குடல் ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி மேற்கு பகுதியை சேர்ந்த சிறுவனே நேற்று (22.06.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுவனுக்கு நேற்றுமுன்தினம் 21ஆம் திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டதனையடுத்து, அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
அதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நேற்று அதிகாலை நான்கு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
குடல் ஒவ்வாமை நோயினால் குறித்த மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதுடன் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
