ஜனாதிபதியின் திட்டம் தீவிரம் - ஒரே நாளில் 981 பேர் அதிரடியாகக் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று முன் தினம் (07.03.2026) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 981 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 989 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 13 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கைப்பற்றல்
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 403 கிராம் ஹெரோயின், 922 கிராம் ஐஸ், 01 கிலோகிராம் 3 கிராம் கஞ்சா, 1,189 கஞ்சா செடிகள், 435 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 15 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,086 போதை மாத்திரைகள், 2 கிலோகிராம் 155 கிராம் மதனமோதகம் மற்றும் 2 கிலோகிராம் 377 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.