மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 96ஆவது ஜனனதினம்
முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைந்துள்ள அண்ணாரின் திருவுருவசிலை வளாகத்தில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்யிருந்தது.
இதனை பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினரால் இன்று( 26.08.2023)காலை 7மணியளவில் முன்னெடுத்தனர்.
விசேட நிகழ்வு
இதன்பொழுது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக் கட்சி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால், 96 ஆவது அகவையை நினைவுறுத்தும் முகமாக அமிர்தலிங்கத்தின் திருவுருவசிலைக்கு மலர்மாலையும் , மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினர், பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணிசெயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan