லண்டன் வாசிகளுக்கு கோவிட் ஆன்டிபாடிகள் அதிகம்! - வெளியாகியுள்ள தகவல்
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு லண்டனில் வசிப்பவர்களுக்கு கோவிட் ஆன்டிபாடிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகரில் வசிக்கும் 93.9 சதவிகித மக்கள் இப்போது தேசிய சராசரியை விட சற்று அதிகமாக வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாக கருதப்படுகிறது.
இங்கிலாந்தில் 10 பெரியவர்களில் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் ஆன்டிபாடிகள் இருக்க வாய்ப்புள்ளது, அனைத்து பிராந்தியங்களிலும் நிலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
எனினும், அதிகரிப்பு விகிதம் குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸை எதிர்த்துப் போராட போதுமான ஆன்டிபாடிகளை உருவாக்க உடலுக்கு தொற்று அல்லது தடுப்பூசி போட்ட பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகும்.
பின்னர் அவை இரத்தத்தில் குறைந்த அளவில் இருக்கும். எனினும், இவை காலப்போக்கில் குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்தில் 93.6 சதவிகிதம் பெரியவர்களுக்கு கோவிட் ஆன்டிபாடிகள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது, இது ஒரு மாதத்திற்கு முன்பு 89.1 சதவீதமாக இருந்தது. இது ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து மாதத்தின் மிக சிறிய அதிகரிப்பு ஆகும்.
வேல்ஸில், மதிப்பீடு 90.3 சதவீதத்திலிருந்து 93.2 சதவீதமாகவும், வடக்கு அயர்லாந்தில் 87.1 சதவீதத்திலிருந்து 90.7 சதவீதமாகவும் உள்ளது. ஸ்காட்லாந்துக்கான மதிப்பீடு 84.5 சதவீதத்திலிருந்து 92.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்டிபாடிகள் என்றால் என்ன?
ஆன்டிபாடிகள் என்பது யுத்த களத்தில் உள்ள போர் வீரனைப் போல, உடலில் தொற்று ஏற்படும் போது, அதனை எதிர்த்து போராடுபவை.
ஆன்டிபாடிகள் என்பது தொற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்கும் வகையில், நமது ரத்ததிலும், வேறு உடல் திரவங்களிலும் காணப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும்.
இது ஒரு கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று ஏற்படும் போது, அதை எதிர்த்து போராட உதவும் நினைவக செல்கள்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மற்றும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலின் இரு உருவாகிறது. ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் போது, அதை எதிர்த்து போராட உதவும் நினைவக செல்கள்.