கடந்த 24 மணிநேரத்தில் 910 பேர் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 910 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் மீட்பு
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 65 கிலோ கிராம் ஹெரோயின், 136 கிராம் ஐஸ் மற்றும் 254 போதை மாத்திரைகள் கடந்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri