தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் 9 ஈடுபட்ட ஐவர் கைது
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய கடற்றொழிலாளர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் நடவடிக்கை
இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழில் படகுகள் கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஒரு இந்திய கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களும் கைப்பற்றப்பட்ட கடற்றொழில் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி


