ஹரக் கட்டாவின் பாதுகாப்புக்காக 87 அதிகாரிகள் கடமையில்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரின் பாதுகாப்புக்காகச் சுமார் 87 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹரக் கட்டாவின் சட்டத்தரணி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள்
ஹரக் கட்டாவின் சட்டத்தரணி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”ஹரக் கட்டா இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதிக காலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர் “ஹரக் கட்டா”தான். ஹரக் கட்டாவின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




