827 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்ற இலங்கை
இலங்கை 2025 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 827 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) பெற்றுள்ளதாக முதலீட்டுச் சபை (BOI) தெரிவித்துள்ளது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
இருப்பினும், அறிவிக்கப்பட்ட தொகையின் குறிப்பிடத்தக்க பகுதி, புதிய பங்கு வரவுகளைக் காட்டிலும், முந்தைய உறுதிப்பாடுகள் மற்றும் உள்ரீதியான மாற்றங்களை உள்ளடக்கியது என்று அவர் எச்சரித்தார்.
முதலீட்டு அறிவிப்புகள்
சினொபெக் (Sinopec) உட்பட பல முக்கிய முதலீட்டு அறிவிப்புகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பொருளாதார வளர்ச்சியை 7% க்கும் அதிகமாக ஆதரிக்க உண்மையான புதிய முதலீட்டின் அவசியத்தை வலியுறுத்தி, அவர் முதலீட்டு சபையின் முக்கிய கொள்கை சீர்திருத்தங்களான பொருளாதார மாற்றல் சட்டமூல, புதிய பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் புதிய முதலீட்டு வலயங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினார்.