வவுனியா மாவட்டத்தில் 82.42 வீதமான மக்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி
வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 82.42 வீதமான மக்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98,000 மக்கள் வசித்து வருவதுடன், அவர்களில் 80,770 மக்களுக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவை 84.42 வீதமாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தில் 75.74வீதமும், கிளிநொச்சியில் 79.29 வீதமும், முல்லைத்தீவில் 75.83 வீதமும், மன்னாரில் 69.74 வீதமும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதன் காரணமாகவே அதிகளவிலானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க முடிந்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





