இலங்கைக்கு வந்தடைந்த 80MW மின்கல சேமிப்பு அமைப்புகள்
இலங்கையின் மின்வலையமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்குமான Battery Energy Storage System (BESS) திட்டத்தின் இரண்டாவது தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.
மின்சக்தி பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ் தெரிவிக்கையில், 60 மெகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை இரவு கொழும்புத் துறைமுகத்தில் இறக்கப்பட்டதாக கூறினார்.
ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த 20 மெகாவாட் அமைப்புடன் சேர்த்து, திட்டமிடப்பட்டுள்ள 160 மெகாவாட் மொத்த திறனில் தற்போது 80 மெகாவாட் திறன் கொண்ட அமைப்புகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் தலா 10 மெகாவாட் மற்றும் 40 மெகாவாட் மணிநேர (MWh) திறன் கொண்ட 16 மின்கல ஆற்றல் சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
உபரி மின்சாரம்
இவை கிளிநொச்சி, வவுனியா, பொலன்னறுவை, வாழைச்சேனை, அம்பாறை, வவுணதீவு, மொனராகலை, மகியங்கனை, சுன்னாகம், பெலியத்த, காலி, புத்தளம், ஹம்பாந்தோட்டை, பழைய அனுராதபுரம், மஹாவ மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் உள்ள மின்நிலையங்களில் நிறுவப்படவுள்ளன.

பகல் நேரங்களில் சூரிய மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் இரவு நேரங்களில் அதனை மீண்டும் வழங்குவதற்கு இந்த மின்கல அமைப்புகள் உதவும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மின்வலையமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், மின்தடை காலங்களில் மாற்று மின்சாரம் வழங்குதல், டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவை குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வீணாவதைத் தடுக்குதல் ஆகியவற்றுக்கும் இந்தத் திட்டம் உதவும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது டீசல் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்சார அலகிற்கான செலவு சுமார் 115 ரூபாவாக இருப்பதாகவும், மின்கல சேமிப்பு அமைப்பின் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தின் செலவு சுமார் 35 ரூபாவாக இருக்கும் எனவும் அர்கம் இலியாஸ் குறிப்பிட்டுள்ளார்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 10 மணி நேரம் முன்
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam