சீனச் சுற்றுலா குழுவில் இடம்பிடித்துக் கொண்ட சாமர சம்பத்! நீதிமன்றத் தடை தற்காலிகமாக நீக்கம்
வெளிநாட்டுப் பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இணைந்து கொண்டுள்ளார்.
சீனாவின் பெய்ஜிங் மற்றும் குவாங்டாங் மாகாணத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒரு சிறப்புப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணத் தடை
சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, ஜூன் 5 ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
[MF9PJஸ
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தலைமையிலான 20 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்றக் குழு கடந்த வாரம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
குறித்த சுற்றுப் பயணத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சாமர சம்பத்தின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்தது.
எனினும் நீதிமன்ற வழக்கொன்றில் அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரை குறித்த சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ள முடியாது என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாமர சம்பத்
அதனை கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த முற்பட்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு சமீபத்தில் ஒரு நாள் நாடாளுமன்ற சபைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு சபையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
எனினும் தனக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடையை நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்து, தற்காலிகமாக நீக்கிக் கொண்டதன் காரணமாக , இறுதியாக அதே சீனப் பயணத்தில் இணைந்துகொள்ளும் வாய்ப்பு சாமர சம்பத்திற்கும் கிட்டியுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ், பெய்ஜிங், செண்சென் மற்றும் குவாங்டாங் மாகாணத்தை மையமாகக் கொண்டு பல விரிவுரைகள், கலந்துரையாடல்கள், நிறுவனப் பயணங்கள் மற்றும் கள ஆய்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் ஆளுகை, பொருளாதார அபிவிருத்தி, உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல், தொழில்நுட்பப் புத்தாக்கம், பசுமை அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி முன்னெடுப்புகள் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் விளக்கமளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிலரங்கில் இலங்கையின் பங்கேற்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், நாடாளுமன்ற ராஜதந்திரத்தை மேம்படுத்தும் என்றும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நிறுவன ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam