யுக்திய நடவடிக்கையில் மேலும் 803 பேர் கைது
நாடு முழுவதும் நடைபெற்ற யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 803 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
மேலும், நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக 562 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையதாக 241 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களில் 06 பேருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 212 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 169 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam