சர்ச்சைக்கு மத்தியில் திரைப்படமாகும் இலங்கை சாதனை தமிழனின் வாழ்க்கை! வெளியானது முதற்பார்வை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சாதனைத் தமிழர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.
முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று மொழிகளில் வெளியாகும் திரைப்படம்
இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஒஸ்கார் விருது வென்ற ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த மாதுர் மிட்டல் நடிக்கிறார்.
திரைப்படம் “800”

எம்.எஸ்.சிறிபாதி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கும் அதேவேளை கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடிப்பதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், அதிகூடிய விக்கெட்டுகளை பெற்ற பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதரன் இன்னமும் தன்னகத்தே கொண்டுள்ளார்.
அதனை கௌரவிக்கும் விதமாக அவரது, வாழ்க்கை வரலாற்றை பற்றிய திரைப்படத்துக்கு '800' என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri