கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 6 பெண்கள்
சட்டவிரோதமான முறையில் டுபாயில் வேலைக்குச் செல்ல முயன்ற 06 பெண்களை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பான போக்குவரத்து ஊக்குவிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டுபாய்க்குச் செல்வதாகக் கூறி, நாட்டை விட்டு வெளியேற முயன்ற பெண்களின் மீது விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சித்த பெண்களின் கடவுச்சீட்டை தற்காலிகமாக கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல முடியாதவாறு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெண்கள் கைது
அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற மாத்தறை - வெலேகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரும், மிஹிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்வது சட்டவிரோதமானது, மேலும் வேலைக்காக வெளிநாடு செல்லும்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
குடிவரவு ஊக்குவிப்பு பிரிவு
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் மனித கடத்தலுக்கு ஆளாவதைத் தடுப்பது மற்றும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் பண்டாரநாயக்கா விமான நிலைய வளாகத்தில் இந்த பாதுகாப்பான குடிவரவு ஊக்குவிப்பு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இதில் உள்ளனர்.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
