பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் கோவிட் தொற்று உறுதி(Photos)
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக தொற்றாளர்கள் கல்வி கற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றுக்குரிய மாணவர்கள் கல்வி கற்ற வகுப்புகளுக்குக் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
இன்று பாடசாலைக்கு 150 மாணவர்கள் வரை சமூகமளித்திருந்தாக அவர் கூறினார். இவர்களில் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அதேபோல் இன்று 63 ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாகவும் அவர் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பைப் பேணியவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்த 500 மாணவர்கள் வரையில் வீடுகளில்
இருக்கப் பணிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
