ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நத்தார் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை (video)
நாடளாவிய ரீதியில் நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகள் நேற்று (25.12.2022) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் பண்டிகையான நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடாளாவிய ரீதியில் 309 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதற்கமைவாக சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்றவற்றால்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகளே பொது
மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகள்
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜேயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை
செய்யப்பட்ட கைதிகளாவர்.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
