கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் 8 மணித்தியால விசாரணை
இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் காவல்துறையினர் இன்று எட்டு மணித்தியாலங்கள் விசாரணை நடாத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாகவும் இந்த சம்பவத்துடன் சசித்ர சேனாநாயக்கவிற்கு தொடர்பு உண்டு எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சசித்ர, முன்பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசடிகளை தடுக்கும் விசேட காவல்துறை விளையாட்டு பிரிவினரால் இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
சசித்ர சேனாநாயக்க இரண்டு வீரர்களிடம் ஆட்ட நிர்ணய சதி செய்யும் தோரணையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாளைய தினமும் சசித்ர சேனாநாயக்காவிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam