தேர்தலுக்கான 77வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை சுமார் 77 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் அட்டை
இந்நிலையில், நாளையும் நாளை மறுதினமும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் வாக்களார் அட்டை கிடைக்காவிட்டால் அதனை தபால் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென உப தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க கூறியுள்ளார்.
மேலும், தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற முடியும் என்பதோடு தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் தினம் வரை இந்த சந்தர்ப்பம் வாக்காளர்களுக்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே ஆட்சி அதிகாரத்திற்கு உகந்தது: குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
