நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
கடந்த 7 ஆம் திகதி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மழை தொடர்பான அனர்த்தங்களால் 76,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, குறித்த காலப்பகுதியில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் 233 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண பணிகள்
38 நலன்புரி நிலையங்களில் 3,560 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
