ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நிவாரண பணி
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை முறையாக மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு மேலும் அறிவித்துள்ளார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும், நிவாரணப் பணிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு பணிகள்
பாதிக்கப்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்கான பாதுகாப்பு பணிகள் பூர்த்தியாகும் வரை பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவசரகால நிலைமைகள் பற்றிய தகவல்களை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 அழைப்பு நிலையம் மற்றும் 0112136136, 0112136222, 0112670002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
