சுரேன் ராகவனின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கும், தமிழில் ஒருவர் உரையாற்றுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
சுரேன் ராகவனுக்கு ரணில் விடுத்த அழைப்பு

இதன்போது தமிழில் உரையாற்றுவதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னிடம் விடுத்திருந்தார்.
நான் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுமானால் தமிழில் உரையாற்றுவேன் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
அதற்கு அவர் சம்மதம்
தெரிவித்தார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri