நாடளாவிய ரீதியில் 734 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும் 16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு காவல்
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம் 323 மில்லி கிராம் ஐஸ், 6,388 கிராம் 385மில்லி கிராம் கஞ்சா, 1,037 போதை மாத்திரைகள் மற்றும் 3,957 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri