ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்ற லிபிய அகதிகளின் படகு கவிழ்ந்து 73 பேர் பலி: ஐ.நா. அமைப்பு தகவல்
லிபியாவிலிருந்து ஐரோப்பா நாடுகளுக்குக் கடல் வழியே சென்ற அகதிகளின் படகு ஒன்று கவிழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நாவுக்கான அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த அமைப்பு நேற்றைய தினம் (15.02.2023) வெளியிட்டுள்ள செய்தியில்,
இதுவரை 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 7 அகதிகள் லிபியா கடற்கரை பகுதிகளில் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். மேலும், காணாமல் போன 73 அகதிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆபத்தான பயணம்
ஜெனீவா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடல் வழியே பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கு லிபியாவை ஒரு மைய புள்ளியாக வைத்துள்ளனர்.
லிபியாவில் உள்நாட்டுக் குழப்பம், கிளர்ச்சியாளர்கள் வன்முறை ஆகியவற்றால் ஸ்திரத் தன்மையற்ற அரசாட்சி காணப்படுவதால் அந்நாட்டிலிருந்தும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் மத்திய தரைக் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்குக் கப்பல் மற்றும் படகுகள் வழியே அகதிகளாகத் தப்பிச் செல்கின்றனர். ஆபத்து நிறைந்த இந்த பயணத்தின்போது, விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மீட்பு பணி
இந்த நிலையில், நேற்று முன்தினம் (14.02.2023) ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் புறப்பட்டுச் சென்ற அகதிகள் படகு ஒன்று லிபியா கடற்கரை பகுதியில் கவிழ்ந்துள்ளது.
அவர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், லிபியாவிலிருந்து ஐரோப்பா நாடுகளுக்குக் கடல் வழியே சென்ற அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
? At least 73 migrants are reported missing and presumed dead following a tragic shipwreck off the Libyan coast yesterday according to @UNmigration in Libya.
— IOM Libya (@IOM_Libya) February 15, 2023
The boat, carrying around 80 people, reportedly departed from Qasr Alkayar on 14 February heading to Europe. pic.twitter.com/fGtUW6bkhT

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
