வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்தில் பிறந்ததின கொண்டாட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது.
யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பலரின் பங்கேற்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கேக் வெட்டியும், 71 இனிப்பு மற்றும் மர கன்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்க வழங்கியும் பிறந்த தினத்தை கொண்டாடினர்.
மேலும், இந்த கொண்டாட்டத்தில் பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில்
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று(26) நல்லூரில் கொண்டாடப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது பொங்கல் பொங்கி மக்களுக்கு பரிமாறப்பட்டது, அத்தோடு கேக், இனிப்பு மற்றும் மர கான்றுகள் உள்ளிட்டவையும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
விசுவமடு
முல்லைத்தீவு விசுவமடு இளைஞர்கள் தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் 71ஆவது பிறந்தநாளை இனிமையான கேக் வெட்டி இன்றையதினம் (26.11.2025) மாலை சிறப்பாகக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலனும் கலந்து கொண்டு கேக் வெட்டி இளைஞர்களுடன் இணைந்தார்.

அவ் வீதியால் சென்ற பொதுமக்களுக்கு கேக் வழங்கி, தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இளைஞர்கள் விழாவை மகிழ்வோடு கொண்டாடியிருந்தனர்.
செய்தி-சதீசன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








