பல நீர்த்தேக்கங்கள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர்ந்து வந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்தான நிலைமை இன்னும் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளப் பெருக்கு
அதேநேரம், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (6) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.