ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவு: எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள சர்வதேச மாணவர்கள்
கனடா அரசு கல்வி அனுமதிகளை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
நாடுகடத்தப்படும் அபாயம்
அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க திட்டமிட்டுள்ளதுடன் 70,000 மாணவர்கள் நாடுகடத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
இந்நிலையில்,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவை எதிர்த்து கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளனர்.

முன்னர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் மட்டும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது, ஒன்ராறியோ, மனித்தோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பேரணிகள் துவங்கியுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri