யாழில் தொடர் சுகயீனத்தால் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு!
யாழில், 20 நாட்கள் தொடர் சுகயீனத்தால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றைய தினம்(28.08.2024) உயிரிழந்துள்ளார்.
இதன்போது, நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய அன்னலட்சுமி நடராசா என்ற ஏழு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த பெண் கிளிநொச்சியிலுள்ள அவரது மகள் வீட்டில் இருந்த வேளை கடந்த 7ஆம் திகதி சுகயீனம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.இருப்பினும் இடையிடையே சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர், 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்தும், சுகயீனம் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(28) காலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 47 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
