7000 துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை
கடந்த ஆண்டு உரிமங்களை புதுப்பிக்கத் தவறிய 7,000 க்கும் அதிகமான துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2024 வரை 7,125 துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 182 இன் பிரிவு 29 (1) இன் கீழ், துப்பாக்கி உரிமையாளர்கள் உரிமம் காலாவதியான பத்து நாட்களுக்குள் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் உரிமங்களை உரிய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
புதுப்பிக்கப்படாத உரிமங்கள்
அதன் பின்னர் துப்பாக்கிகள் உரிய அதிகாரியால் குறிக்கப்பட்ட இடத்தில் களஞ்சியப்படுத்த வேண்டும். இருப்பினும், புதுப்பிக்கப்படாத துப்பாக்கிகளுக்கு இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அறிக்கையில் கண்டறியப்பட்டது.

உரிமங்களை புதுப்பிக்கத் தவறிய துப்பாக்கி உரிமையாளர்கள் குறித்து பொலிஸ் அதிகாரியால் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
புதுப்பிக்கப்படாத அனைத்து துப்பாக்கி உரிமங்கள் தொடர்பாகவும் துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 29 (1) இன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam